இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் பனூநளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (புவைரா எனுமிடத்தில்) எரித்தார்கள்.
இந்த (புவைரா) சம்பவம் குறித்தே (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) பின்வருமாறு பாடினார்கள். ‘புவைராவில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பு – பனூ அய் (குறைஷிக்) குலத்தாரின் தலைவர்களுக்கு (அதை அணைக்க இயலாமல் வாளாவிருப்பது) எளிதாகிவிட்டது’ அப்போது (முஸ்லிமாகாமலிருந்த) அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ், ஹஸ்ஸான்(ரலி) அவர்களுக்கு (கவிதையிலேயே பின்வருமாறு) பதிலளித்தார்.
அந்த (தீயினால் எரிக்கும்) வேலையை அல்லாஹ் நிரந்தரமாக்குவானாக! அதன் சுற்று வட்டாரங்களிலும் நெருப்பு (பற்றி) எரியட்டும. புவைராவிலிருந்து நம்மில் யார் தொலைவில் இருக்கிறார்கள் என்பதை வெகு விரைவில் நீ அறிவாய். நம்மிருவரின் ஊர்களில் எது சேதமடையும் என்பதையும் நீ அறிவாய்’
என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book :64
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، أَخْبَرَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ ” قَالَ: وَلَهَا يَقُولُ حَسَّانُ بْنُ ثَابِتٍ:
وَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَيٍّ … حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ
قَالَ: فَأَجَابَهُ أَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ
أَدَامَ اللَّهُ ذَلِكَ مِنْ صَنِيعٍ … وَحَرَّقَ فِي نَوَاحِيهَا السَّعِيرُ،
سَتَعْلَمُ أَيُّنَا مِنْهَا بِنُزْهٍ … وَتَعْلَمُ أَيُّ أَرْضَيْنَا تَضِيرُ
சமீப விமர்சனங்கள்