தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4038

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

அபூ ராஃபிஉ அப்துல்லாஹ் பின் அபில் ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல்.101

இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் பின் அபில் ஹுகைக் என்றும், இவன் கைபரில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹிஜாஸ் பிரதேசத்தில் தமது கோட்டை யொன்றில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது.

கஅப் பின் அஷ்ரஃப் கொல்லப்பட்ட பிறகே இவன் கொல்லப்பட்டான் என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.102

 பராஉ இப்னு ஆஸிப்( ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒரு குழுவினரை (யூதனான) அபூ ராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு அத்தீக் (ரலி) (கோட்டைக்குள்ளிருந்த) அவனுடைய வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.
Book : 64

(புகாரி: 4038)

بَابُ قَتْلِ أَبِي رَافِعٍ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الحُقَيْقِ
وَيُقَالُ: سَلَّامُ بْنُ أَبِي الحُقَيْقِ، كَانَ بِخَيْبَرَ، وَيُقَالُ: فِي حِصْنٍ لَهُ بِأَرْضِ الحِجَازِ وَقَالَ الزُّهْرِيُّ: «هُوَ بَعْدَ كَعْبِ بْنِ الأَشْرَفِ»

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:

«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَهْطًا إِلَى أَبِي رَافِعٍ، فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ بَيْتَهُ لَيْلًا وَهُوَ نَائِمٌ فَقَتَلَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.