பாடம் : 17
உஹுதுப் போர்106
அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! உஹுதுப்) போருக்காக நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்தும் பொருட்டு நீங்கள் உங்கள் இல்லத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டதை (நினைவு கூர்வீராக!) அல்லாஹ் மிக்க செவியுறுவோனும் நன்கு அறிவோனு மாவான். (3:121)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் (உண்மையிலேயே) இறை நம்பிக்கையுடையவராயின், நீங்களே மேலோங்குவீர்கள். (இப்பொழுது உஹுதுப்போரில்) உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், (இதற்கு முன்னர்-பத்ருப்போரில் உங்கள்) எதிரணியினருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத் தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம்.
(உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உங்களில் இருந்து உயிர்த் தியாகிகளை அவன் உண்டாக்குவதற்காகத் தான். அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களை பிரித்துத் தேர்ந்தெடுக்கவும் மறுப்போரை நசுக்கவும் (அல்லாஹ் நாடியிருந்தான்.)
உங்களில் யார் (அவனுடைய பாதையில் முனைப்போடு) போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலை குலையாமல் நிற்பவர் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சொர்க்கம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர் களா? நீங்கள் (அல்லாஹ்வின் வழியில்) இறப்பைச் சந்திப்பதற்கு முன்னர், அதனை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்பொழுது) அதனை நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டீர்கள். (3:139-143)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். (துவக்கத்தில்) அவனது அனுமதியின் படி அவர்களை நீங்கள் தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள் – ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவேராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு (இறை மறுப்பாளர்களை எதிர்த்து நிற்கமுடியாத வண்ணம்) அவர்களை விட்டு உங்களை திசை திருப்பி விட்டான். (இதன் பிறகும்) அவன் உங்களை மன்னித் தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறை நம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான். (3:152)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீங்கள் எண்ணவேண்டாம்…(3:169)
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், ‘இதோ, ஜிப்ரீல் போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூறினார்கள்.
Book : 64
بَابُ غَزْوَةِ أُحُدٍوَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ المُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ} [آل عمران: 121] وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {وَلاَ تَهِنُوا وَلاَ تَحْزَنُوا وَأَنْتُمُ الأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ، إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ القَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لاَ يُحِبُّ الظَّالِمِينَ، وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الكَافِرِينَ، أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الجَنَّةَ وَلَمَّا يَعْلَمُ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ، وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ المَوْتَ مِنْ قَبْلِ أَنْ تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنْتُمْ تَنْظُرُونَ} [آل عمران: 140] وَقَوْلِهِ: {وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُمْ} [آل عمران: 152] تَسْتَأْصِلُونَهُمْ قَتْلًا {بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الأَمْرِ وَعَصَيْتُمْ مِنْ بَعْدِ مَا أَرَاكُمْ مَا تُحِبُّونَ مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ [ص:94] لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنْكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى المُؤْمِنِينَ} [آل عمران: 152] وَقَوْلِهِ: (وَلاَ تَحْسِبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا) الآيَةَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ: «هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ عَلَيْهِ أَدَاةُ الحَرْبِ»
சமீப விமர்சனங்கள்