பராஉ (ரலி) அறிவிக்கிறார்கள்.
இணைவைப்போரை அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, ‘(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்’ என்று கூறினார்கள்.
நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்தபோது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடிவிட்டனர். பெண்களெல்லாம் (தம் கால்களில் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், ‘(நமக்கே வெற்றி!) போர்ச் செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்)’ என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) (தம் சகாக்களை நோக்கி), ‘என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்த இடத்தைவிட்டு (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள்’ என அறுதியிட்டுக் கூறினார்கள். (எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகரவேண்டாம்) என்று கூறினார்கள். ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அவர்கள் மறுத்து விடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர்.
(இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர். (அப்போது எதிரணித்தலைவர்) அபூ சுஃப்யான் முன்வந்து ‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?’ என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு நீங்கள் பதில் தரவேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். பிறகு, ‘கூடடத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?’ என்று கேட்டு விட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பர்கள்’ என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், ‘தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத் தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்’ என்று பதிலடி கொடுத்தார்கள்.
அதற்கு அபூ சுஃப்யான், ‘(கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது.’ என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு பதிலளியுங்கள்’ என்று கூறினார்கள். ‘(இறைத்தூதர் அவர்களே!) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?’ என்று மக்கள் கேட்டனர். ‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன். மிக மகத்துவமிக்கவன்’ என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது) அபூ சுஃப்யான், ‘எங்களுக்குத் தான் ‘உஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் ‘உஸ்ஸா’ இல்லையே’ என்று கூறினார்.
அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குப் பதிலளியுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது?’ என்று வினவ நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!’ என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்லிம்கள் பதிலளித்தனர்.) ‘இந்த (உஹுதுடைய) நாள், பத்ருப்போர் (நடந்த) நாளுக்கு பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறித் தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது’ என்று அபூ சுஃப்யான் கூறினார்.
Book :64
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
لَقِينَا المُشْرِكِينَ يَوْمَئِذٍ، وَأَجْلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا مِنَ الرُّمَاةِ، وَأَمَّرَ عَلَيْهِمْ عَبْدَ اللَّهِ، وَقَالَ: «لاَ تَبْرَحُوا، إِنْ رَأَيْتُمُونَا ظَهَرْنَا عَلَيْهِمْ فَلاَ تَبْرَحُوا، وَإِنْ رَأَيْتُمُوهُمْ ظَهَرُوا عَلَيْنَا فَلاَ تُعِينُونَا» فَلَمَّا لَقِينَا هَرَبُوا حَتَّى رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ فِي الجَبَلِ، رَفَعْنَ عَنْ سُوقِهِنَّ، قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ، فَأَخَذُوا يَقُولُونَ: الغَنِيمَةَ الغَنِيمَةَ، فَقَالَ عَبْدُ اللَّهِ: عَهِدَ إِلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لاَ تَبْرَحُوا، فَأَبَوْا، فَلَمَّا أَبَوْا صُرِفَ وُجُوهُهُمْ، فَأُصِيبَ سَبْعُونَ قَتِيلًا، وَأَشْرَفَ أَبُو سُفْيَانَ فَقَالَ: أَفِي القَوْمِ مُحَمَّدٌ؟ فَقَالَ: «لاَ تُجِيبُوهُ» فَقَالَ: أَفِي القَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ؟ قَالَ: «لاَ تُجِيبُوهُ» فَقَالَ: أَفِي القَوْمِ ابْنُ الخَطَّابِ؟ فَقَالَ: إِنَّ هَؤُلاَءِ قُتِلُوا، فَلَوْ كَانُوا أَحْيَاءً لَأَجَابُوا، فَلَمْ يَمْلِكْ عُمَرُ نَفْسَهُ، فَقَالَ: كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ، أَبْقَى اللَّهُ عَلَيْكَ مَا يُخْزِيكَ، قَالَ أَبُو سُفْيَانَ: اعْلُ هُبَلُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجِيبُوهُ» قَالُوا: مَا نَقُولُ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُ أَعْلَى وَأَجَلُّ ” قَالَ أَبُو سُفْيَانَ: لَنَا العُزَّى وَلاَ عُزَّى لَكُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَجِيبُوهُ» قَالُوا: مَا نَقُولُ؟ قَالَ: «قُولُوا اللَّهُ مَوْلاَنَا، وَلاَ مَوْلَى لَكُمْ» قَالَ أَبُو سُفْيَانَ: يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالحَرْبُ سِجَالٌ، وَتَجِدُونَ مُثْلَةً، لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي
சமீப விமர்சனங்கள்