ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அறிவித்தார்.
உஹுதுப்போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, நபி (ஸல்)அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்களின் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்னும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இரண்டு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒரு பிரிவினர், ‘(திரும்பி ஓடியவர்களைக்) கொன்று விடுவோம்’ என்று கூறினர். மற்றொரு பிரிவினர், ‘அவர்களை நாம் கொலை செய்யக் கூடாது’ என்று கூறினர்.
(அவர்கள் கருத்து வேறுபட்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் அருளப்பட்டது.
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்களின் விஷயத்தில் இரண்டு (வகையான கருத்துக் கொண்ட) பிரிவினர்களாய் ஆகி விட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ், அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கிறான். (திருக்குர்ஆன் 04:88)
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது’ என்று கூறினார்கள்.
Book :64
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
لَمَّا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ، رَجَعَ نَاسٌ مِمَّنْ خَرَجَ مَعَهُ، وَكَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرْقَتَيْنِ: فِرْقَةً تَقُولُ: نُقَاتِلُهُمْ، وَفِرْقَةً تَقُولُ: لاَ نُقَاتِلُهُمْ، فَنَزَلَتْ {فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا} [النساء: 88] وَقَالَ: «إِنَّهَا طَيْبَةُ، تَنْفِي الذُّنُوبَ، كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الفِضَّةِ»
சமீப விமர்சனங்கள்