தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4093

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையானபோது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(சற்று) பொறுங்கள்’ என்று கூறினார்கள். உடனே அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நீங்கள் ஹிஜ்ரத் செல்ல) தங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், (‘ஆம்’) நான் அதனை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறிவந்தார்கள்.
ஆயிஷா(ரலி) கூறினார்: அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், லுஹர் நேரத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து அவர்களை அழைத்தார்கள். மேலும் ‘(அபூ பக்ர் அவர்களே! நான் ரகசியம் பேசவேண்டும்) உங்களுடன் இருப்பவர்களை வெளியே செல்லும்படிக் கூறுங்கள்’ என்றும் கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) (என்னுடனிருக்கும்) இந்த இருவரும் என்னிரு பெண்மக்கள் (ஆயிஷாவும், அஸ்மாவும் தாம்’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து, மக்காவிலிருந்து) புறப்பட எனக்க அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. உங்களுக்குத் தெரிந்ததா?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘(ஆம்) உடன் வருவதை விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் இரண்டு ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்வதற்கென ஆயத்தமாக்கி வைத்துள்ளேன்’ என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பின்பு, அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள். பின்பு, அவற்றில் ஒன்றை நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒட்டகத்திற்கு ‘ஜத்ஆ’ என்று பெயர். பிறகு இருவரும் ஒளிந்து கொண்டனர். ஆமிர் இப்னு ஃபுஹைரா, என் தாய்வழிச் சசோகதரர் துஃபைல் இப்னு அப்தில்லாஹ் இப்னி சக்பரா அவர்களுக்கு அடிமையாக இருந்தார். மேலும் (என் தந்தை) அபூ பக்ர் அவர்களிடம் பால் தரும் ஒட்டகம் ஒன்றிருந்தது. ஆமிர் இப்னு ஃபுஹைரா அந்த ஒட்டகத்தை மக்காவாசிகளுடன் மதிய வேளையிலும் காலை வேளையிலும் ஓட்டிச் செல்லக் கூடியவராக இருந்தார். காலை நேரத்தில் மக்காவாசிகளுடன் இருக்கும் அவர், இரவின் கடைசி நேரத்தில் நபி(ஸல்) அவர்களிடமும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடமும் (அவர்களுக்கு ஒட்டகப் பால் தருவதற்காகச்) செல்வார். பிறகு அந்த ஒட்டகத்தை (மேய்ப்பதற்கு) ஓட்டிச் செல்வார். ஆனால், இடையர்களில் யாருக்கும் இது தெரியாது. நபி(ஸல்) அவர்கள் (குகையிலிருந்து அபூ பக்ருடன்) புறப்பட்டபோது அவ்விருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராகவும் புறப்பட்டார். மதீனா போய்ச் சேரும் வரையில் அவர்கள் இருவரும் (முறைமாற்றி) ஆமிரைத் தமக்குப் பின் அமர்த்திக் கொண்டனர். (பின்பு) பிஃரு மஊனா நாளில் ஆமிர் இப்னு ஃபுஹைரா கொல்லப்பட்டார்.
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிஃரு மஊனாவில் இருந்த (குர்ஆனை நன்கறிந்த)வர்கள் கொல்லப்பட்டு அம்ர் இப்னு உமய்யா அள்ளம்ரீ(ரலி) கைது செய்யப்பட்டபோது அன்னாரைப் பார்த்து ஆமிர் இப்னு துஃபைல், கொல்லப்பட்டுக் கிடந்த (உயிர்த் தியாகிகளில் ஒருவரைச் சுட்டிக்காட்டி, ‘இவர் யார்?’ என்று கேட்டான். அதற்கு அம்ர் இப்னு உமய்யா(ரலி)அவர்கள், ‘இவர் ஆமிர் இப்னு ஃபுஹைரா’ என்று கூறினார். அதற்கு ஆமிர் இப்னு துஃபைல் ‘இவர் கொல்லப்பட்ட பின்பு இவர் வானத்திற்கு உயர்த்தப்படுவதை கண்டேன். எந்த அளவுக்கென்றால் வானத்தை நான் நோக்கியபோது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அவர் இருந்தார். பிறகு அவர் (பூமியில்) வைக்கப்பட்டார்’ என்று கூறினான்.
(கொல்லப்பட்ட) அவர்களின் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு (ஜிப்ரீல் – அலை – மூலம்) எட்டியது. அவர்கள் கொல்லப்பட்ட செய்தியினைத் தம் தோழர்களுக்கு (பின்வருமாறு) நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். உங்கள் தோழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் தங்கள் இறைவனிடம், ‘இறைவா! நாங்கள் உன்னைக் குறித்து திருப்தி கொண்டோம். நீ எங்களைக் குறித்து திருப்தி கொண்டாய்; எங்களைப் பற்றிய இச்செய்தியை எங்கள் சகோதரர்களுக்கு தெரிவித்துவிடுவாயாக!’ என்று கூறினர். எனவே, இறைவன் அவர்களைப் பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தான்.
அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:
(பிஃரு மஊனா நிகழ்ச்சி நடந்த) அந்நாளில் அவர்களில் உர்வா இப்னு அஸ்மா இப்னி ஸல்த்(ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (ஸுபைர் – ரலி – அவர்களின் மகனாகிய) எனக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது. (அன்று) முன்திர் இப்னு அம்ர்(ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். எனவேதான், (என் சகோதரர் முன்திர் இப்னு ஸுபைருக்கு) ‘முன்திர்’ எனப் பெயரிடப்பட்டது.
Book :64

(புகாரி: 4093)

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو بَكْرٍ فِي الخُرُوجِ حِينَ اشْتَدَّ عَلَيْهِ الأَذَى، فَقَالَ لَهُ: أَقِمْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتَطْمَعُ أَنْ يُؤْذَنَ لَكَ؟ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنِّي لَأَرْجُو ذَلِكَ» قَالَتْ: فَانْتَظَرَهُ أَبُو بَكْرٍ، فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ ظُهْرًا، فَنَادَاهُ فَقَالَ: «أَخْرِجْ مَنْ عِنْدَكَ» فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّمَا هُمَا ابْنَتَايَ، فَقَالَ «أَشَعَرْتَ أَنَّهُ قَدْ أُذِنَ لِي فِي الخُرُوجِ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ الصُّحْبَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصُّحْبَةَ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، عِنْدِي نَاقَتَانِ، قَدْ كُنْتُ أَعْدَدْتُهُمَا لِلْخُرُوجِ، فَأَعْطَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَاهُمَا – وَهِيَ الجَدْعَاءُ – فَرَكِبَا، فَانْطَلَقَا حَتَّى أَتَيَا الغَارَ – وَهُوَ بِثَوْرٍ – فَتَوَارَيَا فِيهِ، فَكَانَ عَامِرُ بْنُ فُهَيْرَةَ غُلاَمًا لِعَبْدِ اللَّهِ بْنِ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، أَخُو عَائِشَةَ لِأُمِّهَا، وَكَانَتْ لِأَبِي بَكْرٍ مِنْحَةٌ، فَكَانَ يَرُوحُ بِهَا وَيَغْدُو عَلَيْهِمْ وَيُصْبِحُ، فَيَدَّلِجُ إِلَيْهِمَا ثُمَّ يَسْرَحُ، فَلاَ يَفْطُنُ بِهِ أَحَدٌ مِنَ الرِّعَاءِ، فَلَمَّا خَرَجَ خَرَجَ مَعَهُمَا يُعْقِبَانِهِ حَتَّى قَدِمَا المَدِينَةَ، فَقُتِلَ عَامِرُ بْنُ فُهَيْرَةَ يَوْمَ بِئْرِ مَعُونَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.