பாடம் : 1 குர்ஆனின் தொடக்க (அத்தியாயமான அல்ஃபாத்திஹா) அத்தியாயம் தொடர்பாக வந்துள்ளவை. இதற்கு உம்முல் கிதாப் (இறைவேதத்தின் தாய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. காரணம், ஏடுகளில் (முதலாவதாக) இதை எழுதித் தான் (திருக்குர்ஆன்) தொடங்கப்படுகின்றது. தொழுகையிலும் இதை (முதலாவதாக) ஓதித் தான் தொடங்கப்படுகின்றது.4 (இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் மூலத்தில் மா-கி யவ்மித்தீன் என்பதில் இடம்பெற்றுள்ள) தீன் எனும் சொல், நன்மைக்கும் தீமைக்கும் வழங்கப்பட விருக்கின்ற பிரதிபலனைக் குறிக்கும். (எனவே,பிரதிபலன் அளிக்கப்படும் நாளின் அதிபதி என இவ்வசனத்தின் பொருள் அமையும்.) கமா ததீனு துதானு(நீ எப்படி நடந்து கொள்வாயோ அப்படியே நடத்தப்படுவாய் எனும் பழமொழியின் மூலத்தில் தீன் எனும் சொல்லில் தொனிக் கின்றபடி, ஒரு செயலுக்கு அதன் பதிலாக நிகழ்கின்ற, அதே போன்ற விளைவைத் தருகின்ற பிரதிபலனை இச்சொல் குறிக்கின்றது.) முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள்5 கூறுகின்றார்கள்: அவ்வாறில்லை. மாறாக, (உண்மை என்னவெனில்) தீனை நீங்கள் நம்ப மறுக்கி றீர்கள் எனும் குர்ஆனின் (82:9ஆவது) வசனத்தில் உள்ள தீனை என்பதற்குச் செயல் களுக்கான விசாரணையை என்று பொருள். (56:86ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) மதீனீன் எனும் சொல்லுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவோர் என்று பொருள்.6
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், அகழ்ப்போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எங்கே (போவது)?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இதோ, இங்கே!’ என்று ‘பனூ குறைழா’ (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.
Book : 64
بَابُ مَرْجِعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الأَحْزَابِ، وَمَخْرَجِهِ إِلَى بَنِي قُرَيْظَةَ وَمُحَاصَرَتِهِ إِيَّاهُمْ
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
لَمَّا رَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الخَنْدَقِ، وَوَضَعَ السِّلاَحَ وَاغْتَسَلَ، أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، فَقَالَ: ” قَدْ وَضَعْتَ السِّلاَحَ؟ وَاللَّهِ مَا وَضَعْنَاهُ، فَاخْرُجْ إِلَيْهِمْ قَالَ: فَإِلَى أَيْنَ؟ قَالَ: هَا هُنَا، وَأَشَارَ إِلَى بَنِي قُرَيْظَةَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ
சமீப விமர்சனங்கள்