தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4125

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 தாத்துர் ரிக்காஉ போர்.198 இது தான் முஹாரிபு கஸ்ஃபா போராகும். இவர்கள் ஃகத்ஃபான் குலத்தின் ஒரு பிரிவினரான பனூ ஸஅலபா கூட்டத்தார் ஆவர்.199 இப்போரில் நபி (ஸல்) அவர்கள் நக்ல் என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (தாத்துர் ரிகாஉ போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான) அபூ மூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால் தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.
 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(நபி-ஸல் அவர்கள் செய்த) ஏழாவது போரான ‘தாத்துர் ரிகாஉ’ போரின்போது தம் தோழர்களுடன் நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத்தொழுகையை தொழுதார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை ‘தூ கரத்’ என்று இடத்தில் தொழுதார்கள்.
Book : 64

(புகாரி: 4125)

بَابُ غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ

وَهِيَ غَزْوَةُ مُحَارِبِ خَصَفَةَ مِنْ بَنِي ثَعْلَبَةَ مِنْ غَطَفَانَ، فَنَزَلَ نَخْلًا، وَهِيَ بَعْدَ خَيْبَرَ، لِأَنَّ أَبَا مُوسَى جَاءَ بَعْدَ خَيْبَرَ

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَخْبَرَنَا عِمْرَانُ القَطَّانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ فِي الخَوْفِ فِي غَزْوَةِ السَّابِعَةِ، غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ» قَالَ ابْنُ عَبَّاسٍ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الخَوْفَ بِذِي قَرَدٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.