தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4142

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு ஷிஹாப்(முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்
‘அலீ(ரலி), ஆயிஷா(ரலி) மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்தா?’ என என்னிடம் வலீத் இப்னு அப்தில் மலிக் கேட்டார். நான், ‘இல்லை; (அலீ – ரலி – அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, ‘தம் விஷயத்தில் அலீ(ரலி) மெளனம் சாதித்தார்கள்’ என ஆயிஷா(ரலி) தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்தைச் சேர்ந்த அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்களும், அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி ஹாரிஸ்(ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர்’ என்று பதிலளித்தேன்.
ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்ட போது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத ‘முஸல்லிமன் அலீ – ரலி- அவர்கள் மெளனமாகவே இருந்தார்கள்’ என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ(ரஹ்) பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிக பட்சமாகக் கூறவில்லை.)
Book :64

(புகாரி: 4142)

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَمْلَى عَلَيَّ هِشَامُ بْنُ يُوسُفَ مِنْ حِفْظِهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ

قَالَ لِي الوَلِيدُ بْنُ عَبْدِ المَلِكِ: أَبَلَغَكَ أَنَّ عَلِيًّا، كَانَ فِيمَنْ قَذَفَ عَائِشَةَ؟ قُلْتُ: لاَ، وَلَكِنْ قَدْ أَخْبَرَنِي رَجُلاَنِ مِنْ قَوْمِكَ، أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَأَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ لَهُمَا: ” كَانَ عَلِيٌّ مُسَلِّمًا فِي شَأْنِهَا فَرَاجَعُوهُ، فَلَمْ يَرْجِعْ وَقَالَ: مُسَلِّمًا، بِلاَ شَكٍّ فِيهِ وَعَلَيْهِ، كَانَ فِي أَصْلِ العَتِيقِ كَذَلِكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.