மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
நானும் ஆயிஷாவும் உட்கார்ந்திருந்தோம். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், “இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும். இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், “ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன். அதற்கு அவள், “(அவதூறுச்) செய்தியைப் பேசியவர்களில் என் மகனும் ஒருவன்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அவள், “இன்னின்னவாறு பேசப்படுகின்றது” என்றாள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், “இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்களா?” என்று கேட்டார்கள். அவள், “ஆம் (செவியுற்றார்கள்)’ என்று பதில் சொன்னாள். பிறகு, “(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் செவியுற்றார்களா?” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். இதற்கும் அவள், “ஆம்’ என்றாள். உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர்காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள்.
நான் ஆயிஷாவின் மீது ஆடையொன்றைப் போர்த்தி மூடிவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, “இவருக்கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒருவேளை இவரைப் பற்றிப் பேசப்பட்டு வரும் செய்தியின் காரணத்தால் (காய்ச்சல் ஏற்பட்டு) இருக்கலாம்” என்று சொன்னார்கள். நான், “ஆம்’ என்றேன்.
உடனே ஆயிஷா (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்துகொண்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் என்னதான் (சமாதானம்) சொன்னாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை, (நபி) யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னது போன்றே) “அல்லாஹ்தான் நீங்கள்(புனைந்து) கூறுபவற்றுக்கெதிராக உதவிகோரத் தகுதியானவன் ஆவான்”’ என்று சொன்னார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு, ஆயிஷா நிரபராதி என (அறிவிக்கும் வசனத்தை) அல்லாஹ் அருளினான். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம், “(இதற்காக) அல்லாஹ்வையே நான் புகழ்கிறேன்; வேறெவரையும் புகழமாட்டேன்; உங்களையும் புகழமாட்டேன்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம்: 64
(புகாரி: 4143)حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: حَدَّثَنِي مَسْرُوقُ بْنُ الأَجْدَعِ، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ رُومَانَ، وَهِيَ أُمُّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ
بَيْنَا أَنَا قَاعِدَةٌ أَنَا وَعَائِشَةُ، إِذْ وَلَجَتْ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَقَالَتْ: فَعَلَ اللَّهُ بِفُلاَنٍ وَفَعَلَ، فَقَالَتْ أُمُّ رُومَانَ: وَمَا ذَاكَ؟ قَالَتْ: ابْنِي فِيمَنْ حَدَّثَ الحَدِيثَ، قَالَتْ: وَمَا ذَاكَ؟ قَالَتْ: كَذَا وَكَذَا، قَالَتْ عَائِشَةُ: سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: نَعَمْ، قَالَتْ: وَأَبُو بَكْرٍ؟ قَالَتْ: نَعَمْ: فَخَرَّتْ مَغْشِيًّا عَلَيْهَا، فَمَا أَفَاقَتْ إِلَّا وَعَلَيْهَا حُمَّى بِنَافِضٍ، فَطَرَحْتُ عَلَيْهَا ثِيَابَهَا فَغَطَّيْتُهَا، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا شَأْنُ هَذِهِ؟». قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخَذَتْهَا الحُمَّى بِنَافِضٍ، قَالَ: «فَلَعَلَّ فِي حَدِيثٍ تُحُدِّثَ بِهِ»، قَالَتْ: نَعَمْ، فَقَعَدَتْ عَائِشَةُ فَقَالَتْ: وَاللَّهِ لَئِنْ حَلَفْتُ لاَ تُصَدِّقُونِي، وَلَئِنْ قُلْتُ لاَ تَعْذِرُونِي، مَثَلِي وَمَثَلُكُمْ كَيَعْقُوبَ وَبَنِيهِ: {وَاللَّهُ المُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ} [يوسف: 18] قَالَتْ: وَانْصَرَفَ وَلَمْ يَقُلْ شَيْئًا، فَأَنْزَلَ اللَّهُ عُذْرَهَا، قَالَتْ: بِحَمْدِ اللَّهِ لاَ بِحَمْدِ أَحَدٍ وَلاَ بِحَمْدِكَ
Bukhari-Tamil-4143.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4143.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் உம்மு ரூமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, புகாரி-3388 , 4143 , 4691 , 4751 , இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
சமீப விமர்சனங்கள்