இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்
ஆயிஷா(ரலி), ‘இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக் கொண்டு…’ என்னும் (திருக்குர்ஆன் 24:15) இறைவசனத்தை ‘இஃத தலிக் கூனஹு..’ என ஓதி வந்தார்கள். (இதன் மூலச் சொல்லான) ‘வல்க்’ (எடுத்துச் சொல்லுதல்) என்பதற்கு ‘பொய்(யை எடுத்துச்) சொல்லுதல்’ என்று பொருள்’ என (விளக்கம்) கூறி வந்தார்கள்.
மேலும், அறிவிப்பாளர் இப்னு அபீ முலைக்கா(ரஹ்), ‘இந்த வசனத்தைப் பற்றி ஆயிஷா அவர்களுக்கே நன்கு தெரியும். ஏனென்றால், இந்த வசனம் அவர்கள் குறித்துத் தான் இறங்கியது’ என்று கூறினார்கள்.
Book :64
حَدَّثَنِي يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ نَافِعِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
كَانَتْ تَقْرَأُ: إِذْ تَلِقُونَهُ بِأَلْسِنَتِكُمْ، وَتَقُولُ: الوَلْقُ الكَذِبُ ” قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: «وَكَانَتْ أَعْلَمَ مِنْ غَيْرِهَا بِذَلِكَ لِأَنَّهُ نَزَلَ فِيهَا»
சமீப விமர்சனங்கள்