தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4159

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

கஅப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவித்தார்.

(நான் ஹுதைபிய்யா ஆண்டில் ‘உம்ரா’ வுக்காக ‘இஹ்ராம்’ அணிந்திருந்த போது) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண்டிருக்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது ‘உன் (தலையிலுள்ள) பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அப்போது ஹுதைபிய்யாவிலிருந்த நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.

மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் ஹுதைபியாவிலேயே இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அப்போது, அல்லாஹ் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட (திருக்குர்ஆன் 02:196-வது) வசனத்தை அருளினான். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு ‘ஃபரக்’ தானியத்தை ஆறுபேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டை குர்பானி செய்ய வேண்டும்; அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும்’ என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.

(புகாரி: 4159)

حَدَّثَنَا الحَسَنُ بْنُ خَلَفٍ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِي بِشْرٍ وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَآهُ وَقَمْلُهُ يَسْقُطُ عَلَى وَجْهِهِ، فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّكَ؟» قَالَ: نَعَمْ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَحْلِقَ، وَهُوَ بِالحُدَيْبِيَةِ، لَمْ يُبَيِّنْ لَهُمْ أَنَّهُمْ يَحِلُّونَ بِهَا، وَهُمْ عَلَى طَمَعٍ أَنْ يَدْخُلُوا مَكَّةَ، فَأَنْزَلَ اللَّهُ الفِدْيَةَ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ يُطْعِمَ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ، أَوْ يُهْدِيَ شَاةً، أَوْ يَصُومَ ثَلاَثَةَ أَيَّامٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.