தாரிக் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
நான் ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன். ‘இது என்ன தொழுமிடம்?’ என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், ‘இதுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘பைஅத்துர் ரிள்வான்’ எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம்’ என்று கூறினர். பின்பு நான் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள், ‘அந்த மரத்தினடியில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முஸய்யப் (ரலி) அவர்கள், ‘(உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்றபோது அந்த மரத்தை நாங்கள் மறந்து விட்டோம். எங்களால் அதனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை’ என்று கூறினார்கள் எனத் தெரிவித்துவிட்டு, பிறகு ஸயீத்(ரஹ்), ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களே அதனை அறியவில்லை. நீங்கள் அறிந்து விட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்தவர்கள்’ என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.
Book :64
حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ
انْطَلَقْتُ حَاجًّا، فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ، قُلْتُ: مَا هَذَا المَسْجِدُ؟ قَالُوا: هَذِهِ الشَّجَرَةُ، حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْعَةَ الرِّضْوَانِ، فَأَتَيْتُ سَعِيدَ بْنَ المُسَيِّبِ فَأَخْبَرْتُهُ، فَقَالَ سَعِيدٌ، حَدَّثَنِي أَبِي ” أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ الشَّجَرَةِ، قَالَ: فَلَمَّا خَرَجْنَا مِنَ العَامِ المُقْبِلِ نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا “، فَقَالَ سَعِيدٌ: «إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ فَأَنْتُمْ أَعْلَمُ»
சமீப விமர்சனங்கள்