தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4180 & 4181

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4180. & 4181. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபிய்யா (ஆண்டில் நடந்த) ‘உம்ரா’ (நிகழ்ச்சி) குறித்துக் கூறினர்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா தினத்தன்று (குறைஷிகளின் தலைவரான) சுஹைல் இப்னு அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டு சமாதான ஒப்பந்தம் (செய்து கொள்வதாக பத்திரம்) எழுதியபோது, சுஹைல் இப்னு அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்:
எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆகவேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள் மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதரிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதனை இறைநம்பிக்கையாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்கு சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அது பற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள். சுஹைல் இந்த நிபந்தனைகள் மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதரிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனைகள் ஏற்று) அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள்.

எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூ ஜந்தலை அன்றைய தினமே அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள். மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் – அவர் முஸ்லிமாக இருந்தாலும் – இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறை நம்பிக்கைகொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார். அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பி விட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறை நம்பிக்கை கொண்ட பெண்களின் விஷயத்தில் தன்னுடைய (திருக்குர்ஆன் 60:10-ம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இதை உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார்.
Book :64

(புகாரி: 4180 & 4181)

حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا  يَعْقُوبُ، حَدَّثَنِي ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ مَرْوَانَ بْنَ الحَكَمِ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ: يُخْبِرَانِ خَبَرًا مِنْ خَبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عُمْرَةِ الحُدَيْبِيَةِ، فَكَانَ فِيمَا أَخْبَرَنِي عُرْوَةُ عَنْهُمَا

أَنَّهُ لَمَّا كَاتَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُهَيْلَ بْنَ عَمْرٍو يَوْمَ الحُدَيْبِيَةِ عَلَى قَضِيَّةِ المُدَّةِ، وَكَانَ فِيمَا اشْتَرَطَ سُهَيْلُ بْنُ عَمْرٍو أَنَّهُ قَالَ: لاَ يَأْتِيكَ مِنَّا أَحَدٌ، وَإِنْ كَانَ عَلَى دِينِكَ إِلَّا رَدَدْتَهُ إِلَيْنَا، وَخَلَّيْتَ بَيْنَنَا وَبَيْنَهُ، وَأَبَى سُهَيْلٌ أَنْ يُقَاضِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا عَلَى ذَلِكَ، فَكَرِهَ المُؤْمِنُونَ ذَلِكَ وَامَّعَضُوا، فَتَكَلَّمُوا فِيهِ، فَلَمَّا أَبَى سُهَيْلٌ أَنْ يُقَاضِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا عَلَى ذَلِكَ، كَاتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا جَنْدَلِ بْنَ سُهَيْلٍ يَوْمَئِذٍ إِلَى أَبِيهِ سُهَيْلِ بْنِ عَمْرٍو، وَلَمْ يَأْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ مِنَ الرِّجَالِ إِلَّا رَدَّهُ فِي تِلْكَ المُدَّةِ، وَإِنْ كَانَ مُسْلِمًا، وَجَاءَتِ المُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ، فَكَانَتْ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ مِمَّنْ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ عَاتِقٌ، فَجَاءَ أَهْلُهَا يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرْجِعَهَا إِلَيْهِمْ، حَتَّى أَنْزَلَ اللَّهُ تَعَالَى فِي المُؤْمِنَاتِ مَا أَنْزَلَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.