நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்…’ என்னும் இந்த (திருக்குர்ஆன் 60:12-ம்) வசனத்தின் காரணத்தினால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பரிசோதித்து வந்தார்கள்.
மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப்(ரஹ்) தம் தந்தையின் சகோதரிடமிருந்து பின்வருமாறு அறிவித்தார்கள்:
‘இணைவைப்பவர்களின் மனைவிமார்களில் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக் கொண்டு)விட்டவர்களுக்காக அவர்களின் (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மஹ்ராகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான்’ இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூ பஸீர்(ரலி) தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.
Book :64
قَالَ ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَمْتَحِنُ مَنْ هَاجَرَ مِنَ المُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ»: {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ المُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} [الممتحنة: 12] وَعَنْ عَمِّهِ قَالَ: ” بَلَغَنَا حِينَ أَمَرَ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَرُدَّ إِلَى المُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ، وَبَلَغَنَا أَنَّ أَبَا بَصِيرٍ: فَذَكَرَهُ بِطُولِهِ
சமீப விமர்சனங்கள்