நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் அணிந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால் இறையில்லம் செல்லவிடாமல் (ஹுதைபிய்யா ஆண்டு) நபி(ஸல்) அவர்களை குறைஷிகள் தடுத்தபோது நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று நானும் செய்வேன். என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது’ என்னும் (திருக்குர்ஆன் 33:21-ம்) வசனத்தை ஓதினார்கள்.
Book :64
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ
أَنَّهُ أَهَلَّ وَقَالَ: ” إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ لَفَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: حِينَ حَالَتْ كُفَّارُ قُرَيْشٍ بَيْنَهُ ” وَتَلاَ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]
சமீப விமர்சனங்கள்