நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), “அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்” என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டுப் பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதிமொழி அளித்தார்கள்.
அத்தியாயம்: 64
(புகாரி: 4187)وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ العُمَرِيُّ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ النَّاسَ كَانُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الحُدَيْبِيَةِ تَفَرَّقُوا فِي ظِلاَلِ الشَّجَرِ، فَإِذَا النَّاسُ مُحْدِقُونَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا شَأْنُ النَّاسِ قَدْ أَحْدَقُوا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَوَجَدَهُمْ يُبَايِعُونَ، فَبَايَعَ ثُمَّ رَجَعَ إِلَى عُمَرَ فَخَرَجَ فَبَايَعَ
Bukhari-Tamil-4187.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4187.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் என்பவர் பற்றி…
சமீப விமர்சனங்கள்