அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(கைபர் போரின் போது) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே!) கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன’ என்று கூறினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி(ஸல்) அவர்கள் மெளனமாக இருந்தார்கள். பிறகு இரண்டாம் முறையும் அவர் வந்து, ‘கழுதைகள் சாப்பிடப்பட்டுவிட்டன’ என்று கூறினார். அப்போதும் அவர்கள் மெளனமாகவே இருந்தார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து, ‘கழுதைகள் தீர்ந்து போய்விட்டன’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு உத்தரவிட அவர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றனர்’ என்று மக்களிடையே அறிவித்தார். உடனே, இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த அந்தப் பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டன.
Book :64
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ جَاءٍ، فَقَالَ: أُكِلَتِ الحُمُرُ، فَسَكَتَ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ ، فَقَالَ: أُكِلَتِ الحُمُرُ، فَسَكَتَ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ: أُفْنِيَتِ الحُمُرُ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى فِي النَّاسِ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الحُمُرِ الأَهْلِيَّةِ». فَأُكْفِئَتِ القُدُورُ وَإِنَّهَا لَتَفُورُ بِاللَّحْمِ
சமீப விமர்சனங்கள்