தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-423

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44 பள்ளிவாசலுக்குள் வைத்து வழக்குகளுக்கு தீர்ப்பளிப்பதும், (தகுந்த சாட்சிகளின்றி மனைவியர் மீது கணவர்கள் விபசாரக் குற்றம் சாட்டுவதன் பேரில்) கணவர்- மனைவியருக்கிடையே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்விப்பதும் (செல்லும்).

குறிப்பு: தன் மனைவி மற்றொரு ஆடவனுடன் தகாத உறவு கொண்டுவிட்டாள் என்று கணவன் குற்றம் சுமத்தி, இதற்கு நான்கு சாட்சிகளையும் கொண்டு வராத போது மனைவியும் அக்குற்றத்தை மறுத்தால்,அவ்விருவரும் நான்கு தடவை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தாங்கள் உண்மையானவர்கள் எனக் கூற வேண்டும். ஐந்தாவது தடவையில் தாம் பொய் சொல்லி இருந்தால் தம் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று இருவரும் கேட்க வேண்டும். இதுவே லிஆன் எனப்படும். இவ்வாறு செய்த பின் அவ்விருவரும் ஒரு காலத்திலும் சேர முடியாது)

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (‘அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்’ என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
Book : 8

(புகாரி: 423)

بَابُ القَضَاءِ وَاللِّعَانِ فِي المَسْجِدِ بَيْنَ الرِّجَالِ وَالنِّسَاءِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ «أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ؟  فَتَلاَعَنَا فِي المَسْجِدِ، وَأَنَا شَاهِدٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.