பாடம் : 45 (அழைப்பின் பேரில்) அடுத்தவர் வீட்டுக்குச் சென்ற ஒருவர் அவ்வீட்டில் தாம் விரும்பிய இடத்தில் தொழுது கொள்ளலாமா? அல்லது வீட்டுக்காரர் பணித்த இடத்தில் தொழ வேண்டுமா? என்பதும், (வீட்டுக்காரர் குறிப்பிடும் இடத்தில் தொழும் போது அவ்விடத்தின் தூய்மை பற்றித்) துருவி விசாரிக்க வேண்டியதில்லை என்பதும்.
இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். ‘உம்முடைய வீட்டில் உமக்காக நான் எந்த இடத்தில் தொழ வேண்டுமென விரும்புகிறீர்’ என்று என்னிடம் கேட்டனர். நான் ஓர் இடத்தைக் காட்டியதும் நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி(த் தொழலா)னார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) தொழுதார்கள்.
Book : 8
بَابُ إِذَا دَخَلَ بَيْتًا يُصَلِّي حَيْثُ شَاءَ أَوْ حَيْثُ أُمِرَ وَلاَ يَتَجَسَّسُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ فِي مَنْزِلِهِ، فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ لَكَ مِنْ بَيْتِكَ؟» قَالَ: فَأَشَرْتُ لَهُ إِلَى مَكَانٍ، فَكَبَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْنَا خَلْفَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ
சமீப விமர்சனங்கள்