பாடம் : 46 வீடுகளிலேயே தொழுமிடத்தை அமைத்துக் கொள்வது. பராஉபின் ஆஸிப் (ரலி) அவர்கள் தமது வீட்டிலுள்ள தொழுமிடத்தில் கூட்டாகச் சேர்ந்து (ஜமாஅத்தாக) தொழுதார்கள்.
இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினருக்குமிடையே தண்ணீர் ஓடுவதால் அவர்களின் பள்ளிக்கு சென்று என்னால் தொழுகை நடத்த முடிவதில்லை. எனவே இறைத்தூதர் அவர்களே! தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஓர் இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக நான் ஆக்கிக் கொள்ள விரும்புகிறேன் என்றேன்.
‘இன்ஷா அல்லாஹ் செய்கிறேன்’ என்று நபி(ஸல்) கூறிவிட்டு மறு நாள் சூரியன் உயரும்போது அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினர். அனுமதித்தேன். வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே ‘உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். வீட்டின் ஒரு பகுதியை நான் அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் (அவ்விடம் நின்று) தக்பீர் கூறினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றோம். இரண்டு ரக்அத்களாக அவர்கள் தொழுகை நடத்திய பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
மாமிசமும் மாவும் கலந்து நபி(ஸல்) அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த உணவை உண்டு செல்லுமாறு அவர்களை நாங்கள் வற்புறுத்தினோம். (நபி(ஸல்) வந்ததைக் கேள்வியுற்ற) அப்பகுதியைச் சேர்ந்த பல ஆடவர்கள் என்னுடைய வீட்டில் வந்து குழுமினார்கள். அவர்களில் சிலர் ‘மாலிக் இப்னு துகைஷின் எங்கே?’ என்று கேட்க, அவர்களில் ஒருவர் ‘அவர் ஒரு முனாபிக்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்காதவர் (எனவேதான் நபியைக் காணவரவில்லையா)’ என்று கூறினார்.
அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறு கூறாதீர்! அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அவர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறியிருப்பதை நீர் அறியமாட்டீரா?’ என்று கேட்டனர். ‘அல்லாஹ்வூவும் அவனுடைய தூதருமே இதை நன்கறிந்தவர்கள்; அவர் நயவஞ்சகர்களுக்கு நல்லது செய்வதாக நாங்கள் அறிகிறோம்’ என்று அவர் கூறினார்.
‘அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரின் மீது நரகத்தை இறைவன் விலக்கிவிட்டான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 8
بَابُ المَسَاجِدِ فِي البُيُوتِ
وَصَلَّى البَرَاءُ بْنُ عَازِبٍ: «فِي مَسْجِدِهِ فِي دَارِهِ جَمَاعَةً»
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ
أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ، أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلًّى، قَالَ: فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ» قَالَ عِتْبَانُ: فَغَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ البَيْتَ، ثُمَّ قَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ» قَالَ: فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنَ البَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَّنَا فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ، قَالَ: فَآبَ فِي البَيْتِ، رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ، فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ: أَيْنَ مَالِكُ بْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّخْشُنِ؟ فَقَالَ بَعْضُهُمْ: ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ ” قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى المُنَافِقِينَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ” قَالَ ابْنُ شِهَابٍ: ثُمَّ سَأَلْتُ الحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ – وَهُوَ أَحَدُ بَنِي سَالِمٍ – وَهُوَ مِنْ سَرَاتِهِمْ، عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ: «فَصَدَّقَهُ بِذَلِكَ»
சமீப விமர்சனங்கள்