பாடம் : 51 தனக்கு முன்னால் அடுப்போ நெருப்போ அல்லது (பிறரால்) வணங்கப்படும் எதோ ஒன்று இருக்கும் போது அவற்றை (சட்டை செய்யாமல்) ஏக இறைவனான அல்லாஹ்வை எண்ணித் தொழுவது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் தொழுது கொண்டிருக்கும் போது எனக்கு நரகத்தை எடுத்துக் காட்டப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் ‘இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான) கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை’ எனக் கூறினார்கள்.
Book : 8
بَابُ مَنْ صَلَّى وَقُدَّامَهُ تَنُّورٌ أَوْ نَارٌ، أَوْ شَيْءٌ مِمَّا يُعْبَدُ، فَأَرَادَ بِهِ اللَّهَ
وَقَالَ الزُّهْرِيُّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُرِضَتْ عَلَيَّ النَّارُ وَأَنَا أُصَلِّي»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ
انْخَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «أُرِيتُ النَّارَ فَلَمْ أَرَ مَنْظَرًا كَاليَوْمِ قَطُّ أَفْظَعَ»
சமீப விமர்சனங்கள்