தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4314

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 55 அல்லாஹ் கூறுகிறான்: (போர்க்)களங்கள் பலவற்றில் (உங்கள் எண்ணிக்கை குறைவாயிருந்தும்) திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக் கின்றான். எனினும், ஹுனைன் போரன்று உங்களை அகமகிழச் செய்து கொண்டிருந்த, உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனையும் அளிக்க வில்லை. பூமி இவ்வளவு விசாலமாயிருந்தும், (அப்போது அது) உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகத் தோன்றியது. அன்றி, நீங்கள் புறமுதுகிட்டு ஓடவும் முற்பட்டீர்கள்…. (9:25-27)344
 இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கையில் வெட்டுக்காயம் ஒன்றைக் கண்டேன். அவர்கள், ‘ஹுனைன் போரில் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது இந்தக் காயம் எனக்கு ஏற்பட்டது.’ என்றார்கள். நான், ‘ஹுனைன் போரில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(ஆம், அதிலும்) அதற்கு முன்பு நடந்த போர்களிலும் கலந்து கொண்டேன்’ என்றார்கள்.
Book : 64

(புகாரி: 4314)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ

رَأَيْتُ بِيَدِ ابْنِ أَبِي أَوْفَى ضَرْبَةً قَالَ: «ضُرِبْتُهَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ حُنَيْنٍ» قُلْتُ: شَهِدْتَ حُنَيْنًا؟ قَالَ: قَبْلَ ذَلِكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.