4342 & 4343. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் ‘அவை யாவை?’ என்று கேட்டார்கள். நான் ‘அல்பித்உ, அல் மிஸ்ர்’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் இப்னு அபீ புர்தா(ரஹ்) கூறினார்:
நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூ புர்தா(ரஹ்) அவர்களிடம், ‘பித் உ’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பித் உ’ என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், ‘மிஸ்ர்’ என்பது வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்’ என்று பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Book :64
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ [ص:162] إِلَى اليَمَنِ، فَسَأَلَهُ عَنْ أَشْرِبَةٍ تُصْنَعُ بِهَا، فَقَالَ: «وَمَا هِيَ؟» قَالَ: البِتْعُ وَالمِزْرُ، فَقُلْتُ لِأَبِي بُرْدَةَ: مَا البِتْعُ؟ قَالَ: نَبِيذُ العَسَلِ، وَالمِزْرُ نَبِيذُ الشَّعِيرِ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» رَوَاهُ جَرِيرٌ، وَعَبْدُ الوَاحِدِ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ
…
அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-46.
சமீப விமர்சனங்கள்