தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4346

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தா.ர்
என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அப்தஹ்’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘நீங்கள் (இஹ்ராமின் போது) என்ன சொன்னீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘தாங்கள் இஹ்ராம் அணிந்ததைப் போன்றே நானும் இஹ்ராம் அணிகிறேன்’ என்று சொன்னேன்’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘உங்களுடன் தியாகப் பிராணியை நீங்கள் கொண்டு வந்தீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘கொண்டு வரவில்லை’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவை வலம் வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்கமிடைய தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத்தலைவாரினாள். இவ்வாறே, உமர்(ரலி) கலீஃபாவாக ஆக்கப்படும் வரை நாங்கள் செயல்பட்டு வந்தோம்.
Book :64

(புகாரி: 4346)

حَدَّثَنِي عَبَّاسُ بْنُ الوَلِيدِ هُوَ النَّرْسِيُّ حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، حَدَّثَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ، قَالَ: سَمِعْتُ طَارِقَ بْنَ شِهَابٍ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو مُوسَى الأَشْعَرِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَرْضِ قَوْمِي، فَجِئْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنِيخٌ بِالأَبْطَحِ، فَقَالَ: «أَحَجَجْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ» قُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «كَيْفَ قُلْتَ؟» قَالَ: قُلْتُ: لَبَّيْكَ إِهْلاَلًا كَإِهْلاَلِكَ، قَالَ: «فَهَلْ سُقْتَ مَعَكَ هَدْيًا» قُلْتُ: لَمْ أَسُقْ، قَالَ: «فَطُفْ بِالْبَيْتِ، وَاسْعَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، ثُمَّ حِلَّ». فَفَعَلْتُ حَتَّى مَشَطَتْ لِي امْرَأَةٌ مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، وَمَكُثْنَا بِذَلِكَ حَتَّى اسْتُخْلِفَ عُمَرُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.