தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4349

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 62

அலீ பின் அபீ தாலிப், காலித் பின் வலீத் -ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகிய இருவரும் ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்.

 பராஉ (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீதின் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீயே! காலிதின் சகாக்களில் ‘உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வரவிரும்புவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்கிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!’ என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந்தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் ‘ஊக்கியா’க்களை நான் பெற்றேன்.

அத்தியாயம்: 64

(புகாரி: 4349)

بَابُ بَعْثِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلاَمُ، وَخَالِدِ بْنِ الوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِلَى اليَمَنِ قَبْلَ حَجَّةِ الوَدَاعِ

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ إِسْحَاقَ بْنِ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ

بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ خَالِدِ بْنِ الوَلِيدِ إِلَى اليَمَنِ، قَالَ: ثُمَّ بَعَثَ عَلِيًّا بَعْدَ ذَلِكَ مَكَانَهُ فَقَالَ: «مُرْ أَصْحَابَ خَالِدٍ، مَنْ شَاءَ مِنْهُمْ أَنْ يُعَقِّبَ مَعَكَ فَلْيُعَقِّبْ، وَمَنْ شَاءَ فَلْيُقْبِلْ» فَكُنْتُ فِيمَنْ عَقَّبَ مَعَهُ، قَالَ: فَغَنِمْتُ أَوَاقٍ ذَوَاتِ عَدَدٍ


Bukhari-Tamil-4349.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4349.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: குப்ரா பைஹகீ-3932 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.