பாடம் : 64 தாத்துஸ் ஸலாஸில் போர். 388 இதுவே லக்ம் மற்றும் ஜுதாம் போர் ஆகும். இதை இஸ்மாயீல் பின் அபீகா-த் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (தாத்துஸ் ஸலாஸில் என்பது) பனூ பலீ, பனூ உத்ரா, பனுல் கைன் ஆகிய குலங்களின் ஊராகும் என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அம்ர் இன்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ‘தாத்துஸ் ஸலாஸில்’ (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என்ற கேட்டேன். அவர்கள், ‘ஆயிஷா’ என்று பதிலளித்தார்கள். நான், ‘ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அபூ பக்ர்(ரலி)’ என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு யார்?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமர்’ என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் கணித்து (அவர்களெல்லாம் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். ‘தமக்கு பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசிய ஆளாக ஆக்கி விடுவார்களோ’ என்று அஞ்சியபடி நான் மெளனமாயிருந்து விட்டேன்.
Book : 64
بَابُ غَزْوَةِ ذَاتِ السُّلاَسِلِ
وَهِيَ غَزْوَةُ لَخْمٍ وَجُذَامَ، قَالَهُ إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ وَقَالَ ابْنُ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ، عَنْ عُرْوَةَ هِيَ بِلاَدُ بَلِيٍّ وَعُذْرَةَ وَبَنِي القَيْنِ
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ الحَذَّاءِ، عَنْ أَبِي عُثْمَانَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَمْرَو بْنَ العَاصِ عَلَى جَيْشِ ذَاتِ السُّلاَسِلِ، قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ» قُلْتُ: مِنَ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا» قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «عُمَرُ» فَعَدَّ رِجَالًا، فَسَكَتُّ مَخَافَةَ أَنْ يَجْعَلَنِي فِي آخِرِهِمْ
சமீப விமர்சனங்கள்