தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4364

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ(ரலி) அறிவித்தார்.
முழுமையான வடிவில் அருளப்பட்ட கடைசி அத்தியாயம், ‘பராஅத்’ (என்னும் 9-வது ‘அத் தவ்பா’) அத்தியாயம் ஆகும். கடைசியாக அருளப்பட்ட அத்தியாயப் பகுதி ‘அந்நிஸா’வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:
(நபியே!) மக்கள் உங்களிடம் ‘கலாலா’ பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு ‘கலாலா’ பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கிறான்.. (திருக்குர்ஆன் 04: 176)
Book :64

(புகாரி: 4364)

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ  حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ، وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ} [النساء: 176]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.