நபி(ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்’ என்றேன். அவர்கள், எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன்’ என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்து, ஸஃபா, மர்வாவுக்கு இடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண் ஒருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள். என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :64
حَدَّثَنِي بَيَانٌ، حَدَّثَنَا النَّضْرُ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ طَارِقًا، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَطْحَاءِ، فَقَالَ: «أَحَجَجْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «كَيْفَ أَهْلَلْتَ» قُلْتُ: لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «طُفْ بِالْبَيْتِ، وَبِالصَّفَا، وَالمَرْوَةِ، ثُمَّ حِلَّ» فَطُفْتُ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَأَتَيْتُ امْرَأَةً مِنْ قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي
சமீப விமர்சனங்கள்