தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-44

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 இறை நம்பிக்கை (ஈமான்) கூடுவதும், குறைவதும்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுக்கு நாம் நேர்வழியை அதிகமாக்கினோம் (18:13)

இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31).

அல்லாஹ் கூறுகிறான்: இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவுபடுத்திவிட்டேன் (5:3)

அதாவது இந்த நிறைவான (மார்க்கத்)தில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் (மார்க்கத்தால்) குறைவுடையவராவார்.

தம் உள்ளத்தில் ஒரு வால் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) ‘நன்மை’ என்று கூறினார்கள் என மேற்கண்ட நபி மொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ஈமான் எனும் நம்பிக்கை என்று குறிப்பிட்டதாக அனஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
Book : 2

(புகாரி: 44)

بَابُ زِيَادَةِ الإِيمَانِ وَنُقْصَانِهِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَزِدْنَاهُمْ هُدًى} [الكهف: 13] {وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا} [المدثر: 31] وَقَالَ: «اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ» فَإِذَا تَرَكَ شَيْئًا مِنَ الكَمَالِ فَهُوَ نَاقِصٌ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ  النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ أَبَانُ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ إِيمَانٍ» مَكَانَ «مِنْ خَيْرٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.