‘அறிந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் உங்களின் இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகிறதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, ‘நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் (சேர்த்து விட்டீர்கள்)’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! நீ சாட்சியாக இரு’ என்று மும்முறை கூறிய பின், ‘உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ!’ அல்லது ‘அந்தோ பரிதாபமே!’ கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book :64
…
أَلاَ إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ ” قَالُوا: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ – ثَلاَثًا – وَيْلَكُمْ، أَوْ وَيْحَكُمْ، انْظُرُوا، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»
Bukhari-Tamil-4403.
Bukhari-TamilMisc-4403.
Bukhari-Shamila-4403.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்