தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4407

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்
யூதர்களில் சிலர், (ஒரு குறிப்பிட்ட இறை வசனம் பற்றி), ‘இந்த வசனம் (யூதர்களான) எங்களிடையே அருளப்பட்டிருந்தால் நாங்கள் (இது அருளப் பெற்ற) அந்த நாளை (கொண்டாடப்படவேண்டிய) பெருநாளாக ஆக்கிக்கொண்டிப்போம்’ என்று கூறினர். உமர்(ரலி), ‘எந்த வசனம் அது?’ என்று கேட்க அவர்கள், ‘எந்த வசனம் அது?’ என்று கேட்க அவர்கள், ‘இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன்; உங்களின் மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்து விட்டேன்; உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துக் கொண்டேன்’ எனும் (திருக்குர்ஆன் 05:03) இறைவசனம் தான் அது’ என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர்(ரலி), ‘இது எந்த இடத்தில் அருளப்பெற்றது’ என்று கூறினார்கள்.
Book :64

(புகாரி: 4407)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ

أَنَّ أُنَاسًا، مِنَ اليَهُودِ قَالُوا: لَوْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا لاَتَّخَذْنَا ذَلِكَ اليَوْمَ عِيدًا، فَقَالَ عُمَرُ: أَيَّةُ آيَةٍ؟ فَقَالُوا: {اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا} [المائدة: 3]. فَقَالَ عُمَرُ: «إِنِّي لَأَعْلَمُ أَيَّ مَكَانٍ أُنْزِلَتْ أُنْزِلَتْ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفٌ بِعَرَفَةَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.