தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4470

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 89
 அபுல்கைர் மர்ஸத் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்
நான் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்ஸுனாபிஹீ(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் எப்போது (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ஸுனாபிஹீ(ரஹ்) ‘நாங்கள் யமன் நாட்டிலிருந்து (நபியின் நகரமான மதீனாவை நோக்கி) ஹிஜ்ரத் செய்து வந்தோம். நாங்கள் ‘ஜுஹ்ஃபா’வுக்கு வந்த சேர்ந்தபோது, (தம் வாகனத்தில் பயணித்தபடி) பயணி ஒருவர் எங்களை நோக்கி வந்தார். நான் அவரிடம், ‘(முக்கியச்) செய்தி ஏதும் உண்டா?’ என்று கேட்டேன். அந்தப் பயணி, ‘ஐந்து நாள்களுக்கு முன்பு நாங்கள் நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்துவிட்டோம்’ என்று பதிலளித்தார்.
நான் ‘லைத்துல் கத்ர் (குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தின் கண்ணியமிக்க இரவு) பற்றி நீங்கள் (மதீனாவில்) ஏதேனும் செவியுற்றீர்களா?’ என்று ஸுனாபிஹி அவர்களிடம் கேட்க, அவர், ‘ஆம். நபி(ஸல்) அவர்களின் (பள்ளிவாசலின்) தொழுகை அழைப்பாளரான பிலால்(ரலி), ‘அது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாள்களில் ஏழாவது இரவில் கிடைக்கும் என்று எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 64

(புகாரி: 4470)

بَابٌ

حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الحَارِثِ، عَنِ ابْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ الصُّنَابِحِيِّ

أَنَّهُ قَالَ لَهُ: مَتَى هَاجَرْتَ؟ قَالَ: خَرَجْنَا مِنَ اليَمَنِ مُهَاجِرِينَ، فَقَدِمْنَا الجُحْفَةَ، فَأَقْبَلَ رَاكِبٌ، فَقُلْتُ لَهُ: الخَبَرَ؟ فَقَالَ: «دَفَنَّا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ خَمْسٍ»، قُلْتُ: هَلْ سَمِعْتَ فِي لَيْلَةِ القَدْرِ شَيْئًا؟ قَالَ: نَعَمْ، أَخْبَرَنِي بِلاَلٌ مُؤَذِّنُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ فِي السَّبْعِ فِي العَشْرِ الأَوَاخِرِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.