பாடம் : 2
(அவர்கள் உனது) கோபத்திற்குள்ளானவர்களும் அல்லர்; வழிதவறிச் சென்றவர்களும் அல்லர் (எனும்1:7ஆவது இறைவசனம்).
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ என்று ஓதியவுடன் நீங்கள், ‘ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)’ என்று சொல்லுங்கள்.
ஏனெனில், எவரது ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்தமைந்து விடுகிறதோ அவருக்கு, அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 65
بَابُ {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7]
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِذَا قَالَ الإِمَامُ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} [الفاتحة: 7] فَقُولُوا آمِينَ، فَمَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ المَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
சமீப விமர்சனங்கள்