பாடம் : 2
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(2:14 ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) இலா ஷயாத்தீனிஹிம் (தங்களுடைய ஷைத்தான்களுடன்) எனும் சொல்லுக்கு, நயவஞ்சகர்களும் இணை வைப்பவர்களுமான தங்களுடைய தோழர்கள் என்று பொருள்.
(2:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹீத்துன் பில் காஃபிரீன் (இந்த நிராகரிப்போரை அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்) எனும் சொற்றொடருக்கு, இறை மறுப்பாளர்களான அவர்களை அல்லாஹ் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறான். (அவர்களால் தப்ப முடியாது) என்று பொருள்.
(2:138 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸிப்ஃகத் (வர்ணம்) எனும் சொல்லுக்கு தீன் – மார்க்கம் என்று பொருள்.
(2:45 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அலல் காஷியீன் (உள்ளச்சமுடையோர் மீது) எனும் சொற்றொடருக்கு உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது என்று பொருள்.
(2:63 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பிகுவ்வத்தின் (உறுதியாக) எனும் சொல்லுக்கு, வேதத்திலுள்ளபடி செயல்படுங்கள் என்று பொருள்.
அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(2:10 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மரள் (நோய்) எனும் சொல்லுக்குச் சந்தேகம் என்று பொருள்.
(2:66 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வமா கல்ஃபஹா (பின்னால் உள்ளவர்களுக்கு) எனும் சொல்லுக்கு, அவர்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் (படிப்பினையாக நாம் ஆக்கினோம்) என்று பொருள்.
(2:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா ஷியத்த (மறு இல்லாதது) எனும் சொல் லுக்கு,வெண்மையில்லாதது என்று பொருள்.
அபுல்ஆலியா (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றார்கள்:
(2:49 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யசூமூனக்கும் (கொடிய வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்) எனும் சொல்லுக்கு, உங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர் என்று பொருள். (இப்பொருளின் மூலச் சொல்லான) அல்வலாயா எனும் சொல், அல்வலாஃ என்பதன் வேர்ச் சொல்லாகும். இதற்கு இறையாண்மை என்று பொருள். அல்விலாயா என்று அதனை வாசித்தால், அதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள்.
(2:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபூம் (கோதுமை) எனும் சொல், உண்ணப்படுகின்ற தானியங்கள் அனைத்தையுமே குறிக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
(2:90 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப பாஊ (இறைமுனிவுக்கு ஆளாகிவிட் டார்கள்) எனும் சொல்லுக்கு, அவர்கள் (இறை முனிவுடன்) திரும்பினார்கள் என்று பொருள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:
(2:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யஸ்தஃப்திஹூன (வெற்றியளிக்கும்படி வேண்டினர்) எனும் சொல்லுக்கு, உதவி தேடினர் என்று பொருள்.
(2:102 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள வாங்கினார்கள் என்ற சொற்பொருள் கொண்ட) ஷரவ் எனும் சொல்லுக்கு, விற்றார்கள் என்று பொருள்.
(2:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ராஇனா எனும் சொல், ருஊனத் (மடமை) எனும் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அவர்கள் ஒரு மனிதனை மடையனாக்க விரும்பினால் அவனை நோக்கி,ராஇனா (மடையனே) என்று சொல்வார்கள்.
(2:48 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள போதாது எனும் சொற்பொருள் கொண்ட) லா தஜ்ஸீ எனும் சொல்லுக்குப் பயனளிக்க முடியாது என்று பொருள்.
(2:168 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள எட்டுகள் எனும் சொற்பொருள் கொண்ட) குத்வாத் எனும் சொல், கத்வ் எனும் (மூலச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்குக் கால் சுவடுகள் என்று பொருள்.
(2:124 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள கஷ்டம் கொடுத்தான் எனும் சொற்பொருள் கொண்ட) இப்தலா எனும் சொல்லுக்குச் சோதித்தான் என்று பொருள்.
பாடம் : 3
ஆகவே, நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளைக் கற்பிக்காதீர்கள் எனும் (2:22ஆவது) வசனத் தொடர்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன்.
‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது’ என்று கூறினார்கள்.
Book : 65
بَابُ
قَالَ مُجَاهِدٌ: {إِلَى شَيَاطِينِهِمْ} [البقرة: 14] «أَصْحَابِهِمْ مِنَ المُنَافِقِينَ وَالمُشْرِكِينَ» {مُحِيطٌ بِالكَافِرِينَ} [البقرة: 19]: «اللَّهُ جَامِعُهُمْ» {عَلَى الخَاشِعِينَ} [البقرة: 45]: «عَلَى المُؤْمِنِينَ حَقًّا» قَالَ مُجَاهِدٌ: {بِقُوَّةٍ} [البقرة: 63]: «يَعْمَلُ بِمَا فِيهِ»
وَقَالَ أَبُو العَالِيَةِ: {مَرَضٌ} [البقرة: 10]: «شَكٌّ» {وَمَا خَلْفَهَا} [البقرة: 66]: «عِبْرَةٌ لِمَنْ بَقِيَ» {لاَ شِيَةَ} [البقرة: 71]: «لاَ بَيَاضَ»
وَقَالَ غَيْرُهُ: {يَسُومُونَكُمْ} [البقرة: 49]: ” يُولُونَكُمُ الوَلاَيَةُ، – مَفْتُوحَةٌ – مَصْدَرُ الوَلاَءِ، وَهِيَ الرُّبُوبِيَّةُ، إِذَا كُسِرَتِ الوَاوُ فَهِيَ الإِمَارَةُ،
وَقَالَ بَعْضُهُمْ: الحُبُوبُ الَّتِي تُؤْكَلُ كُلُّهَا فُومٌ “
وَقَالَ قَتَادَةُ: {فَبَاءُوا}: «فَانْقَلَبُوا»
وَقَالَ غَيْرُهُ: {يَسْتَفْتِحُونَ} [البقرة: 89]: يَسْتَنْصِرُونَ، {شَرَوْا} [البقرة: 102]: بَاعُوا، {رَاعِنَا} [البقرة: 104]: مِنَ الرُّعُونَةِ، إِذَا أَرَادُوا أَنْ يُحَمِّقُوا إِنْسَانًا، قَالُوا: رَاعِنًا، {لاَ يَجْزِي} [لقمان: 33]: لاَ يُغْنِي، {خُطُوَاتِ} [البقرة: 168]: مِنَ الخَطْوِ، وَالمَعْنَى: آثَارَهُ {ابْتَلَى} [البقرة: 124]: اخْتَبَرَ
بَابُ قَوْلِهِ تَعَالَى: {فَلاَ تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ} [البقرة: 22]
حَدَّثَنِي عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ». قُلْتُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «وَأَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ». قُلْتُ: ثُمَّ أَيُّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»
சமீப விமர்சனங்கள்