பாடம் : 10
மேலும், (நபியே! நினைவு கூருக:) இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த (இறை) இல்லத்தின் அடித்தளங்களை உயர்த்திக் கொண்டிருந்த பொழுது எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (அனைத் தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவாய் (எனப் பிரார்த்தித்தார்கள்) எனும் (2:127ஆவது) இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்கவாஇத் (அடித்தளங்கள்) எனும் சொல், அந்த இ(றையி)ல்லத்தின் அஸ்திவாரத்தைக் குறிக்கும். இதன் ஒருமை: காஇதா ஆகும். (மாதவிடாய் நின்று போன முதிய) பெண்களைக் குறிக்கின்ற அல்கவாஇத் எனும் சொல்லின் ஒருமை, காஇத் என்பதாகும்.
நபி (ஸல்) அவர்களின் மனைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிட சுருக்கி (சற்று உள்ளடக்கி) விட்டதை நீ காணவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதை தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா? என கேட்டேன்.
உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்) என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவை இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்கு காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.
Book : 65
بَابُ {وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ القَوَاعِدَ مِنَ البَيْتِ، وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ} [البقرة: 127]
القَوَاعِدُ: أَسَاسُهُ، وَاحِدَتُهَا قَاعِدَةٌ، {وَالقَوَاعِدُ مِنَ النِّسَاءِ} [النور: 60]: وَاحِدُهَا قَاعِدٌ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«أَلَمْ تَرَيْ أَنْ قَوْمَكِ بَنَوْا الكَعْبَةَ، وَاقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ». فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ قَالَ: «لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالكُفْرِ» فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أُرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الحِجْرَ، إِلَّا أَنَّ البَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ»
சமீப விமர்சனங்கள்