பாடம் : 11
(நம்பிக்கை கொண்டவர்களே!) அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ் வேதத்)தையும்,மற்றும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களின்) சந்ததியினர்(களான நபிமார்கள்) மீது அருளப்பெற்றதையும், மற்றும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டவற்றையும், (இதர) அனைத்து இறைத் தூதர்களுக்கும் தங்களுடைய இரட்சகனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் நம்புகிறோம். அவர்களில் எவருக்கிடையி லும் நாங்கள் பாகுபாடு காட்டமாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்கே அடிபணிபவர்களாக இருக்கின்றோம் என்று கூறுங்கள்! (எனும் 2:136ஆவது இறைவசனம்).
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம்.
(மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும், மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.
Book : 65
بَابُ {قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ المُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
كَانَ أَهْلُ الكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالعَرَبِيَّةِ لِأَهْلِ الإِسْلاَمِ،
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لا تُصَدِّقُوا أَهْلَ الكِتَابِ وَلا تُكَذِّبُوهُمْ،
وَقُولُوا: {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا} [البقرة: 136] الآيَةَ
சமீப விமர்சனங்கள்