தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4489

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 (நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புங்கள். மேலும் நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பட்டவர்கள் அது தங்களுடைய இறைவனி டமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். மேலும், அவர்கள் செய்கின்ற வற்றைப்பற்றி அல்லாஹ் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:144ஆவது இறைவசனம்).
 அனஸ்(ரலி) அறிவித்தார்.
(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.
Book : 65

(புகாரி: 4489)

بَابُ قَوْلِهِ: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ المَسْجِدِ الحَرَامِ} [البقرة: 144] إِلَى: (عَمَّا تَعْمَلُونَ)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«لَمْ يَبْقَ مِمَّنْ صَلَّى القِبْلَتَيْنِ غَيْرِي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.