தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4500

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி (அத்தை) ‘ருபய்யிஉ’ (பின்த் நள்ர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினார். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையில் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்குவதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ‘ருபய்யிஉ’வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரின் முன்பல் உடைக்கப்படக்கூடாது’ என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்’ என்று கூறினார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகிறான்’ என்று கூறினார்கள்.
Book :65

(புகாரி: 4500)

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ السَّهْمِيَّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ

أَنَّ الرُّبَيِّعَ عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهَا العَفْوَ فَأَبَوْا، فَعَرَضُوا الأَرْشَ فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَوْا، إِلَّا القِصَاصَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: يَا رَسُولَ اللَّهِ أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ؟ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَنَسُ، كِتَابُ اللَّهِ القِصَاصُ». فَرَضِيَ القَوْمُ فَعَفَوْا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.