பாடம் : 28 இன்னும் இருள் ரேகையிலிருந்து விடிய-ன் வெள்ளை ரேகை உங்களுக்குத் தென்படும் வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள். பின்னர் இரவு (தொடங்கும்) வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல் களில் (இஃதிகாஃப்) தங்கியிருக்கும் போது (உங்கள் மனைவியரான) அவர்களுடன் கூடி விடாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புக ளாகும். இவற்றை (மீறுகிற எண்ணத்தில்) நெருங்கிவிடாதீர்கள். இவ்வாறே மானிடர்களுக்கு அவர்கள் (தீமையிலிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களைத் தெளிவாக்கு கிறான் எனும் (2:187ஆவது) வசனத் தொடர். இஃதிகாஃப் இருப்பவர் என்றால் தங்கியிருப்பவர் என்று பொருள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
(இந்த 02:187வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி(ஸல்) அவர்களிடம் சென்று,) ‘இறைத்தூதர் அவர்களே!’ என் தலையணையின் கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே?!)’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.
Book : 65
بَابُ قَوْلِهِ: {وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الخَيْطُ الأَبْيَضُ مِنَ الخَيْطِ الأَسْوَدِ مِنَ الفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلاَ تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي المَسَاجِدِ} [البقرة: 187]
إِلَى قَوْلِهِ: {يَتَّقُونَ} [البقرة: 187]، {العَاكِفُ} [الحج: 25]: المُقِيمُ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيٍّ، قَالَ
أَخَذَ عَدِيٌّ عِقَالًا أَبْيَضَ، وَعِقَالًا أَسْوَدَ حَتَّى كَانَ بَعْضُ اللَّيْلِ نَظَرَ فَلَمْ يَسْتَبِينَا، فَلَمَّا أَصْبَحَ قَالَ يَا رَسُولَ اللَّهِ: جَعَلْتُ تَحْتَ وِسَادِي عِقَالَيْنِ، قَالَ: «إِنَّ وِسَادَكَ إِذًا لَعَرِيضٌ أَنْ كَانَ الخَيْطُ الأَبْيَضُ، وَالأَسْوَدُ تَحْتَ وِسَادَتِكَ»
சமீப விமர்சனங்கள்