தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4518

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 எவரேனும் உம்ரா(வை நிறைவேற்றுவதன்) மூலம் ஹஜ்ஜுக்கு முன்பே (ஹஜ் காலத்தில் தடுக்கப்பெற்றிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் அவர் பலிப்பிராணிகளில் தமக்குச் சாத்தியமானதை குர்பானி கொடுக்க வேண்டும். பலிப்பிராணி கிடைக்கப் பெறாத வர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், (வீடு) திரும்பிவிட்டபின் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். இவை முழுமை யான பத்து (நோன்புகள்) ஆகும் (எனும் 2:196ஆவது வசனத் தொடர்).53
 இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
‘தமத்துஉ’ (ஹஜ் தொடர்பான இந்த 02:196 வது) வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் அருளப்பட்டது. எனவே, நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம். அதைத் தடை செய்யும் குர்ஆன் (வசனம்) எதுவும் அருளப்படவில்லை. நபி(ஸல்) அவர்களும் தாம் இறக்கும் வரை அதைத் தடை செய்யவில்லை. (ஆனால், இந்த விஷயத்தில்) ஒருவர் மட்டும் தாம் விரும்பிய (மாற்றுக் கருத்)தைக் தம் (சொந்த) அபிப்பிராயப்படி தெரிவித்தார்.
முஹம்மத் இப்னு இஸ்மாயீல் புகாரீயாகிய நான் கூறுகிறேன்: ‘அவர் உமர்(ரலி) தாம்’ என்று சொல்லப்படுகிறது.
Book : 65

(புகாரி: 4518)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

أُنْزِلَتْ آيَةُ المُتْعَةِ فِي كِتَابِ اللَّهِ، فَفَعَلْنَاهَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يُنْزَلْ قُرْآنٌ يُحَرِّمُهُ، وَلَمْ يَنْهَ عَنْهَا حَتَّى مَاتَ، قَالَ: رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.