தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4524

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 உங்களுக்கு முன் சென்றுவிட்ட (இறை நம்பிக்கை கொண்ட)வர்களின் (சோதனை யான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்து விடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங் களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட் டார்கள். இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயாக அண்மையில் இருக்கிறது (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது (எனும் 2:214ஆவது இறைவசனம்).
 இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) ‘(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ எனும் (திருக்குர்ஆன் 12:110 வது) வசனத்தில் (‘குஃத்திபூ’ இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள் – என்று வாசிக்காமல்) ‘குஃதிபூ’ (தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்’) என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, ‘இறைத் தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கிற அளவிற்கு அலைக்கழிக்கப்பட்டார்கள். ‘இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது’ (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது’) எனும் (திருக்குர்ஆன் 02:214 வது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள்.
பிறகு நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் (குஃதிபூ என இப்னு அப்பாஸ்(ரலி)) அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.
Book : 65

(புகாரி: 4524)

بَابُ {أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ البَأْسَاءُ وَالضَّرَّاءُ} [البقرة: 214] إِلَى {قَرِيبٌ} [البقرة: 186]

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ: قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

{حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا} [يوسف: 110] خَفِيفَةً، ذَهَبَ بِهَا هُنَاكَ، وَتَلاَ: {حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلاَ إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ} [البقرة: 214]. فَلَقِيتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.