பாடம் : 44 நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனத்தில் இருந்தவர்களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்த பிரகாரம் அவனை(த் தொழுது) நினைவு கூருங்கள் (எனும்2:239ஆவது இறை வசனம்). இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:73 (2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) குர்சிய்யுஹு (அவனது அரசாட்சி) எனும் சொல்லுக்கு அவனது அறிவு என்று பொருள். (2:247ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பஸ்தத்தன் (அதிகம்) எனும் சொல்லுக்கு கூடுதல்,சிறப்பு என்று பொருள். (2:250ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃப்ரிஃக் (பொழிவாயாக!) எனும் சொல்லுக்கு இறக்கியருள் என்று பொருள். (2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) வலா யஊதுஹு (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு (வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல் இடம் பெற்றுள்ள) ஆதனீ என்பதற்கு எனக்குப் பளுவாகிவிட்டதுஎன்று பொருள். ஆது என்பதற்கும் அய்த் என்பதற்கும் பலம் என்று பொருள். (அதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) சினா எனும் சொல்லுக்குச் சிற்றுறக்கம் என்று பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள். (2:258ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃப புஹித்த (வாயடைத்துப் போனான்) என்பதற்கு அவனது ஆதாரம் போய்விட்டது என்று பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காவியா(விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, மக்கள் சஞ்சாரமற்ற என்று பொருள். உரூஷிஹா (முகடுகள்) என்பதற்கு அதன் கட்டடங்கள் என்று பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) நுன்ஷிருஹா எனும் சொல்லுக்கு அதை வெளிப்படுத்துகிறோம்என்று பொருள். (2:266ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) இஃஸார் (சூறாவளி) எனும் சொல்லுக்குத் தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகின்ற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்: (2:264ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸல்த் (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப்பாறை) என்று பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:265ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வாபில் என்பது பெருமழையும் அத்தல்லு என்பது தூறலும் ஆகும். இது இறை நம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும். (2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) யதசன்னஹ் (கெட்டுப் போனது) என்பதற்கு (இயல்பு) மாறிவிட்டது என்று பொருள்.
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:
(முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், சலாம் கொடுக்காமலேயே இது வரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இதுவரை தொழாதவர்கள், முன் சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர்.
பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரண்டு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லாத் திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.
இதன் அறிவிப்பாளரான மாலிக்(ரஹ்) கூறினார்:
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக கருதுகிறேன் என்று நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள்.
Book : 65
بَابُ قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ} [البقرة: 239] وَقَالَ ابْنُ جُبَيْرٍ: {كُرْسِيُّهُ} [البقرة: 255]: «عِلْمُهُ»، يُقَالُ {بَسْطَةً} [البقرة: 247]: «زِيَادَةً وَفَضْلًا»، {أَفْرِغْ} [البقرة: 250]: «أَنْزِلْ»، {وَلاَ يَئُودُهُ}: «لاَ يُثْقِلُهُ، آدَنِي أَثْقَلَنِي، وَالآدُ وَالأَيْدُ القُوَّةُ» السِّنَةُ: «نُعَاسٌ» {يَتَسَنَّهْ} [البقرة: 259]: «يَتَغَيَّرْ»، {فَبُهِتَ} [البقرة: 258]: «ذَهَبَتْ حُجَّتُهُ»، {خَاوِيَةٌ} [البقرة: 259]: «لاَ أَنِيسَ فِيهَا»، {عُرُوشُهَا} [البقرة: 259]: «أَبْنِيَتُهَا» (نُنْشِرُهَا): «نُخْرِجُهَا»، {إِعْصَارٌ} [البقرة: 266]: «رِيحٌ عَاصِفٌ تَهُبُّ مِنَ الأَرْضِ إِلَى السَّمَاءِ، كَعَمُودٍ فِيهِ نَارٌ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {صَلْدًا} [البقرة: 264]: «لَيْسَ عَلَيْهِ شَيْءٌ» وَقَالَ عِكْرِمَةُ: {وَابِلٌ} [البقرة: 264]: ” مَطَرٌ شَدِيدٌ، الطَّلُّ: النَّدَى، وَهَذَا مَثَلُ عَمَلِ المُؤْمِنِ ” {يَتَسَنَّهْ} [البقرة: 259]: «يَتَغَيَّرْ»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَةِ الخَوْفِ قَالَ: «يَتَقَدَّمُ الإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ، فَيُصَلِّي بِهِمُ الإِمَامُ رَكْعَةً، وَتَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُمْ وَبَيْنَ العَدُوِّ لَمْ يُصَلُّوا، فَإِذَا صَلَّى الَّذِينَ مَعَهُ رَكْعَةً، اسْتَأْخَرُوا مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَلاَ يُسَلِّمُونَ، وَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا فَيُصَلُّونَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ يَنْصَرِفُ الإِمَامُ وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَيَقُومُ كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لِأَنْفُسِهِمْ رَكْعَةً بَعْدَ أَنْ يَنْصَرِفَ الإِمَامُ، فَيَكُونُ كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَإِنْ كَانَ خَوْفٌ هُوَ أَشَدَّ مِنْ ذَلِكَ، صَلَّوْا رِجَالًا قِيَامًا عَلَى أَقْدَامِهِمْ أَوْ رُكْبَانًا، مُسْتَقْبِلِي القِبْلَةِ أَوْ غَيْرَ مُسْتَقْبِلِيهَا» قَالَ مَالِكٌ: قَالَ نَافِعٌ: لاَ أُرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ذَكَرَ ذَلِكَ إِلَّا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்