பாடம் : 45 உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றி விடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார் களாக! (எனும் 2:240ஆவது வசனத் தொடர்).
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நான், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் ‘உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக!’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (திருக்குர்ஆன் 02:234 வது) இறை வசனத் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
உஸ்மான்(ரலி), இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே)விட்டுவிடு! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 65
بَابُ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} [البقرة: 234]
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، وَيَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالا: حَدَّثَنَا حَبِيبُ بْنُ الشَّهِيدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قَالَ ابْنُ الزُّبَيْرِ
قُلْتُ لِعُثْمَانَ: هَذِهِ الآيَةُ الَّتِي فِي البَقَرَةِ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} [البقرة: 234] إِلَى قَوْلِهِ {غَيْرَ إِخْرَاجٍ} [البقرة: 240] قَدْ نَسَخَتْهَا الأُخْرَى، فَلِمَ تَكْتُبُهَا؟ قَالَ: «تَدَعُهَا يَا ابْنَ أَخِي، لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْهُ مِنْ مَكَانِهِ»، قَالَ حُمَيْدٌ: أَوْ نَحْوَ هَذَا
சமீப விமர்சனங்கள்