தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4538

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக் கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந் தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகை யான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடைகிறது. வலு வில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலையில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்து போவதை உங்களில் எவரேனும் விரும்பு வாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான் எனும் (2:266 ஆவது) இறைவசனம்.
 அப்துல் அஸீஸ் இப்னு அப்தில் மலிக் இப்னி ஜுரைஜ்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்), இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களின் சகோதரர் அபூ பக்ர் இப்னு அபீ முலைக்கா அவர்கள், உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:
உமர்(ரலி) ஒரு நாள் நபித்தோழர்களிடம், ‘நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிற திராட்சை மற்றும் பேரிச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து…’ (என்று தொடங்கும்) இந்த (திருக்குர்ஆன் 02:266 வது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, அவர்கள், ‘அல்லாஹ்வே அறிந்தவன்’ என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி) கோபமடைந்து, ‘எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டிலொன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்’ என்று கேட்க, இப்னு அப்பாஸ்(ரலி), ‘அதைப் பற்றி என் உள்ளத்தில் ஞானம் உள்ளது. இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக்கொள்ளாதீர்கள்’ என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘என்ன செயல்?’ என்று கேட்க, இப்னு அப்பாஸ், ‘ஒரு செயலுக்கு’ என்று (மீண்டும்) கூறினார்கள். உமர்(ரலி), ‘செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்து வந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்துவிட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)’ என்று கூறினார்கள்.
Book : 65

(புகாரி: 4538)

بَابُ قَوْلِهِ: {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ} [البقرة: 266]

إِلَى قَوْلِهِ: {لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ} [البقرة: 219]

حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: وَسَمِعْتُ أَخَاهُ أَبَا بَكْرِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ

قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَوْمًا لِأَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِيمَ تَرَوْنَ هَذِهِ الآيَةَ نَزَلَتْ: {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ} [البقرة: 266]؟ قَالُوا: اللَّهُ أَعْلَمُ، فَغَضِبَ عُمَرُ فَقَالَ: «قُولُوا نَعْلَمُ أَوْ لاَ نَعْلَمُ»، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فِي نَفْسِي مِنْهَا شَيْءٌ يَا أَمِيرَ المُؤْمِنِينَ، قَالَ عُمَرُ: «يَا ابْنَ أَخِي قُلْ وَلاَ تَحْقِرْ نَفْسَكَ»، قَالَ ابْنُ عَبَّاسٍ: ضُرِبَتْ مَثَلًا لِعَمَلٍ، قَالَ عُمَرُ: «أَيُّ عَمَلٍ؟» قَالَ ابْنُ عَبَّاسٍ: لِعَمَلٍ، قَالَ عُمَرُ: «لِرَجُلٍ غَنِيٍّ يَعْمَلُ بِطَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، ثُمَّ بَعَثَ اللَّهُ لَهُ الشَّيْطَانَ، فَعَمِلَ بِالْمَعَاصِي حَتَّى أَغْرَقَ أَعْمَالَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.