பாடம் : 10 இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்). இதனால் (அல்லாஹ்) உங்களுக்கு துக்கத்திற்கு மேல் துக்கத்தைக் கொடுத்தான் எனும் (3:153ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) உக்ராக்கும் (உங்கள் பின்னால்) எனும் சொல்,ஆகிரிக்கும் எனும் சொல்லின் பெண்பாலாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (உஹுதுப் போர் குறித்துப் பேசும் 9:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இஹ்தல் ஹுஸ்னயைன்(இவ்விரு நன்மை களில் ஒன்றை) எனும் சொற்றொடர் வெற்றி அல்லது வீர மரணத்தைக் குறிக்கின்றது.
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு(த் தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர். (அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான் ‘இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்)’ எனும் இந்த (திருக்குர்ஆன் 03:153 வது) இறைவசனம் குறிப்பிடுகிறது. அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.
Book : 65
بَابُ قَوْلِهِ: {وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ} [آل عمران: 153]
وَهْوَ تَأْنِيثُ آخِرِكُمْ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «إِحْدَى الحُسْنَيَيْنِ فَتْحًا أَوْ شَهَادَةً»
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، وَأَقْبَلُوا مُنْهَزِمِينَ فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، وَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ اثْنَيْ عَشَرَ رَجُلًا»
சமீப விமர்சனங்கள்