தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4562

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகின்ற சிற்றுறக்கத்தை அவன் உங்களுக்கு அருளினான் எனும் (3:154 ஆவது) வசனத் தொடர்.
 அபூ தல்ஹா ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போர் நாளில் எங்கள் அணிகள் (நின்றிருந்த) இடத்தில் நாங்கள் இருந்தபோது எங்களைச் சிற்றுறக்கம் ஆட்கொண்டது. அதனால் என்னுடைய வாள் என் கையிலிருந்து (நழுவி) விழத் தொடங்க, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, நானும் அதை எடுப்பேன்.
Book : 65

(புகாரி: 4562)

بَابُ قَوْلِهِ: {أَمَنَةً نُعَاسًا} [آل عمران: 154]

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَبُو يَعْقُوبَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ أَبَا طَلْحَةَ، قَالَ

غَشِيَنَا النُّعَاسُ وَنَحْنُ فِي مَصَافِّنَا يَوْمَ أُحُدٍ، قَالَ: فَجَعَلَ سَيْفِي يَسْقُطُ مِنْ يَدِي وَآخُذُهُ وَيَسْقُطُ وَآخُذُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.