தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4571

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைய வைக்கின்றாயோ, நிச்சயமாக அவனை நீ இழிவுக்குள்ளாக்கிவிட்டாய். மேலும் (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிவோர் எவருமிலர் (எனும் 3:192 ஆவது இறைவசனம்).
 அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் என் சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா(ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாட்டில் (தலைவைத்துப்) படுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலைவைத்துப்) படுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்குச் சற்று முன்பு வரை, அல்லது அதற்குச் சற்றப் பின்பு வரை உறங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுந்து தம் முகத்திலிருந்து தம் இரண்டு கரங்களால் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை (திருக்குர்ஆன் 03:190 – 200) ஓதினார்கள். பிறகு (கட்டித்) தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதைச் சாய்த்து) அதிலிருந்து ‘உளு’ (அங்கசுத்தி) செய்தார்கள். தம் உளுவை அவர்கள் செம்மையாகச் செய்து தொழுவதற்காக நின்றார்கள். அவர்கள் செய்தது போன்றே நானும் செய்துவிட்டுப் பிறகு அவர்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கரத்தை என் தலை மீது வைத்து என் வலக்காதைத் திரும்னார்கள். (பிறகு) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழலானார்கள். மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ‘வித்ர்’ தொழுதார்கள். பிறகு பாங்கு சொல்பவர் (தொழுகை அறிவிப்புச் செய்பவரான பிலால் அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு) தம்மிடம் வரும் வரை ஒருக்களித்துப்படுத்திருந்தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வெளியே புறப்பட்டுச் சென்று சுப்ஹுத் தொழுகையை (மக்களுடன்) தொழுதார்கள்.
Book : 65

(புகாரி: 4571)

بَابُ {رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ} [آل عمران: 192]

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ

أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَهْيَ خَالَتُهُ – قَالَ: فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ – أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ – ثُمَّ اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدَيْهِ، ثُمَّ «قَرَأَ العَشْرَ الآيَاتِ الخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ اليُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي بِيَدِهِ اليُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ المُؤَذِّنُ، فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.