பாடம் : 2 (அநாதைகளைப் பராமரிப்பவராகிய) அவர் செல்வராக இருந்தால் (பராமரிப்புக்கான சன்மானம் எதையும் பெறாமல்) தவிர்த்து விடட்டும்! அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்! அநாதைகளிடம் அவர்களுடைய செல்வங்களை நீங்கள் ஒப்படைக்கும் போது அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கணக்குக் கேட்க அல்லாஹ் போதுமானவன் (எனும் 4:6ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) பிதாரன் எனும் சொல்லுக்கு அவசரமாக என்று பொருள். (4:18ஆவது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஃதத்னா எனும் சொல்லுக்குத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்று பொருள். இச்சொல் இதாத் (ஆயத்தம்) எனும் மூலச்சொல்லிலிருந்து அஃப்அல்னாஎனும் வாய்பாட்டில் வந்ததாகும்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வராக இருந்தால், அவர் (அநாதைகளின் சொத்துகளிலிருந்து உண்பதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும். அவர் ஏழையாக இருந்தால் முறைப்படி உண்ணட்டும்!’ எனும் (திருக்குர்ஆன் 04:6 வது) இறைவசனம் அநாதையின் செல்வம் தொடர்பாக அருளப்பட்டது. (அதனைப்) பராமரிப்பவர் ஏழையாக இருந்தால், அதைப் பராமரிப்பதற்குப் பகரமாக நியாயமான அளவு அதிலிருந்து (எடுத்து) உண்ணலாம். (இதுதான் அதன் பொருள்.)
Book : 65
بَابُ {وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ، فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا} [النساء: 6]
{وَبِدَارًا} [النساء: 6]: «مُبَادَرَةً»، {أَعْتَدْنَا} [النساء: 18]: «أَعْدَدْنَا أَفْعَلْنَا مِنَ العَتَادِ»
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فِي قَوْلِهِ تَعَالَى
{وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} [النساء: 6] أَنَّهَا «نَزَلَتْ فِي وَالِي اليَتِيمِ إِذَا كَانَ فَقِيرًا، أَنَّهُ يَأْكُلُ مِنْهُ مَكَانَ قِيَامِهِ عَلَيْهِ بِمَعْرُوفٍ»
சமீப விமர்சனங்கள்