தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4583

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் (மலஜலம் கழித்து விட்டுக்) கழிப்பிடத்திலிருந்து வந்தால், அல்லது பெண்களை நீங்கள் தீண்டியிருந்தால் (இந்நிலைகளிலெல்லாம் துப்புரவு செய்ய) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணால் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களின் முகங்களிலும் கைகளிலும் (அதைத்) தடவிக் கொள் ளுங்கள் எனும் (4:43ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸஈதன் (மண்) எனும் சொல் பூமியின் மேல் பரப்பைக் குறிக்கின்றது. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ள4:60ஆவது வசனத்தில்-அவர்கள் தாஃகூத்தை (விஷமியை) நிராகரித்து விட வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டிருக்க, அந்த தாஃகூத்திடமே தீர்ப்புக்கேட்க அவர்கள் விரும்புகின்றனர் என்பதில்-உள்ளன தாஃகூத் எனும் சொல் சோதிடனைக் குறிக்கும். (அன்றைய அரபுகளில்) ஜுஹைனாகுலத்தாரிடையே ஒருவனும், அஸ்லம் குலத்தாரிடையே ஒருவனும், ஒவ்வொரு குலத்தாரிடையே ஒருவனுமாகப் பல சோதிடர்கள் இருந்தனர். அவர்கள் மீது (குறிசொல்லும்) ஷைத்தான் இறங்குவான். இத்தகைய தாஃகூத்களிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்டுவந்தனர். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (4:51ஆவது வசனத்திலுள்ள) ஜிப்த் எனும் சொல் சூனியத்தையும், தாஃகூத் என்பது ஷைத்தானையும் குறிக்கும். இக்ரிமா (ரஹ்) அவர்கள், ஜிப்த் என்பது அபிசீனிய(ர்களின்) மொழியில் ஷைத்தானைக் குறிக்கும்; தாஃகூத் என்பது சோதிடனைக் குறிக்கும் என்று கூறினார்கள்.
 ஆயிஷா(ரலி) கூறினார்.
(என் சகோதரி) அஸ்மாவின் கழுத்து மாலையொன்று (ஒரு பயணத்தில் என்னிடமிருந்து) தொலைந்துவிட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் அதைத் தேடுவதற்காகச் சிலரை அனுப்பிவைத்தார்கள். அப்போது தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அப்போது அவர்கள் உளுவுடன் (அங்க சுத்தியுடன்) இருக்கவில்லை. (உளுச் செய்வதற்கு) தண்ணீரும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, உளு இன்றியே அவர்கள் தொழுதார்கள். அப்போதுதான் உயர்ந்தோனாகிய அல்லாஹ் – தயம்மும் (பற்றிய சட்டத்தைக் கூறும்) இறைவசனத்தை – அருளினான்.
Book : 65

(புகாரி: 4583)

بَابُ قَوْلِهِ: {وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الغَائِطِ} [النساء: 43]

{صَعِيدًا} [النساء: 43]: «وَجْهَ الأَرْضِ» وَقَالَ جَابِرٌ: «كَانَتِ الطَّوَاغِيتُ الَّتِي يَتَحَاكَمُونَ إِلَيْهَا، فِي جُهَيْنَةَ وَاحِدٌ، وَفِي أَسْلَمَ وَاحِدٌ، وَفِي كُلِّ حَيٍّ وَاحِدٌ، كُهَّانٌ يَنْزِلُ عَلَيْهِمُ الشَّيْطَانُ» وَقَالَ عُمَرُ: ” الجِبْتُ: السِّحْرُ، وَالطَّاغُوتُ: الشَّيْطَانُ ” وَقَالَ عِكْرِمَةُ: ” الجِبْتُ: بِلِسَانِ الحَبَشَةِ شَيْطَانٌ، وَالطَّاغُوتُ: الكَاهِنُ

حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

هَلَكَتْ قِلاَدَةٌ لِأَسْمَاءَ، «فَبَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَلَبِهَا رِجَالًا، فَحَضَرَتِ الصَّلاَةُ، وَلَيْسُوا عَلَى وُضُوءٍ، وَلَمْ يَجِدُوا مَاءً، فَصَلَّوْا وَهُمْ عَلَى غَيْرِ وُضُوءٍ فَأَنْزَلَ اللَّهُ»، يَعْنِي آيَةَ التَّيَمُّمِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.